கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கோரிக்கை தொடர்பான காரணங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















