நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய இலங்கை விரைவில் முற்றாக பிராந்திய வல்லரசுகள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்கு மத்தியில் சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டத்திற்கு எதிராக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



















