மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணியின் பிரதாணியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்றுஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனியே நடத்த ஆளும் கட்சியிலுள்ள ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.




















