கொரோனா தொற்றுநிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதனால், பொதுமக்ளை விழிப்பாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை கடந்த வாரம் சற்று அதிகரித்து நிலைமை காணப்பட்ட போதிலும் இந்த வாரம் சற்று கொரோனா தொற்று நிலைமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் 14 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 1,155 பேருக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 639 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 17 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.



















