திருநெல்வேலி பால் பண்ணை வீதியில் மனைவி அடித்ததில் கணவர் பலியாகியுள்ளார்.
இன்று காலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக இவ்வாறான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.