ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தினை முன் நிறுத்தி நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும் என தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தனது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்து நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தினை வழங்கியமை பாரிய வெற்றி என, தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.