சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிசாரினால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பாட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும், 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.