சீதுவ லியனகேமுல்ல பகுதியில் சீதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12) இரவு நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 568 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு கடத்திய போது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
31 வயதுடைய பெண் சந்தேக நபரும் 40 வயதுடைய ஆண் சந்தேக நபரும் வேபட மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.