தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையில் விருந்தினர்கள் எவரையும் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டாமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு விருந்தினர்களை வீட்டில் அனுமதிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஹோட்டல்களுக்கு வெளியாரை அனுமதிப்பது தடைசெய்யப்பட்ட பின்னர் தற்போது அந்த செயற்பாட்டை வீட்டில் உள்ள சிலர் செய்யப்பார்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தான செயற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.