அநுராதபுர மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1250 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆரியரத்ன தெரிவித்தார்.
மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கருத்து வௌியிட்ட அவர்:
பண்டிகைக் காலத்தின் பின்னரான காலப்பகுதில் மாத்திரம் அநுராதபுரம் மாவட்டத்தில் 350 க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அநுராதபுரம் மெத்சிரி செவன மற்றும் நொச்சியாகம , கலன்பிந்துனுவெவ,கெப்பித்திகொள்ளாவ , உள்ளிட்ட வைத்தியசாலைகள் தயாராக உள்ளன.
இந்த கொரோனா சிகிச்சை நிலையங்கள் அனைத்திலும் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மேலும் நோயாளர்களை அனுமதிக்கக் முடியாத நிலை தோன்றியுள்ளது.
எனவே மேலும் இரு வைத்தியசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு கொவிட் 19 சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு முப்படையினரின் உதவிகளும் கிடைத்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.