நாட்டில் உள்ள 19 கல்வியல் கல்லூரிகளின் விடுதிகள் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் மாலை முதல் கோவிட் நோயாளிகள் கல்வியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















