கொரோனா வைரஸ் ஆனது தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. மேலும், உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், பல கட்டுப்பாடுகளை விதித்த அரசு மக்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது.
இதெல்லாம், ஒரு பக்கம் சென்றாலும், இணையத்தள வழியாக, வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலிகளில் கொரோனாவை விரட்ட போலியான டிப்ஸ்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், வெறும் 2 – 3 சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விடுவதன் மூலம் கொரோனா வைரஸை உடலில் இருந்து அகற்ற முடியும் என்று ஒரு வீடியோ போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
மேலும், அந்த வீடியோவில் பேசிய நபர் எலுமிச்சை சிகிச்சை ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான கொரோனா வைரஸிலிருந்து அவர்களை காப்பாற்றும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2 சொட்டு எலுமிச்சை சாறை எடுத்து மூக்கிற்குள் விடுமாறும் அறிவுறுத்தினார். இப்படி செய்வதன் மூலம் கண், காது, மூக்கு மற்றும் இதயம் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளும் வெறும் ஐந்தே வினாடிகளில் சுத்திகரிக்கப்படும்.
அது தவிர இது அனைத்து சளி மற்றும் இருமல் நோய்களையும் எதிர்கொள்பவர்களுக்கு இந்த முறை நிவாரணம் அளிக்கும் என்று அந்த நபர் வீடியோவில் கூறுகிறார்.
இதனையடுத்து, இந்த வீடியோ குறித்து தெளிவுப்படுத்திய PIB எனப்படும் பத்திரிகை தகவல் பணியகம், எலுமிச்சை தெரபி என கூறப்படும் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது அல்லது COVID-19 நோய் தொற்றை தடுக்காது. இந்த வைரல் வீடியோ முற்றிலும் போலியானது என்று குறிப்பிட்டுள்ளது.
News stating that COVID patients are recovering from the intake of rock salt along with raw onion are FAKE! Don’t fall prey to misinformation! For authentic news and information, visit: https://t.co/t8yHLhHqZa #IndiaFightsCorona #MyGovMythBusters pic.twitter.com/enHnIi7NRg
— MyGovIndia (@mygovindia) April 23, 2021
सोशल मीडिया पर साझा किए जा रहे वीडियो में दावा किया जा रहा है कि नाक में नींबू का रस डालने से #कोरोनावायरस तुरंत ही खत्म हो जाएगा#PIBFactCheck:- वीडियो में किया गया दावा #फर्जी है। इसका कोई वैज्ञानिक प्रमाण नहीं है कि नाक में नीबू का रस डालने से #Covid19 को खत्म किया जा सकता है pic.twitter.com/cXpqzk0dCK
— PIB Fact Check (@PIBFactCheck) May 1, 2021




















