கோவிட் வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்தான நிலைமையில், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்து்ளளார்.
இந்த நிலைமையால், கீழ் மட்டத்தில் உள்ள வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் வெறுப்படைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக இவர்கள் இனிவரும் காலங்களில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்தும் இருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 70 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால், ஒக்சிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவு மாத்திரமல்லாது, மருந்துகளுக்கும் தட்டுபாடு ஏற்படும்.
அதிகளவில் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால், அவர்களை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், பிரதேசங்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சரை தவிர வேறு அரசியல்வாதிகள் அழுத்தங்களை கொடுக்க