நாட்டில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பிரதான தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு தனியான விடுதிகளை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடுதிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கொரோனா நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களை அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.