கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையம்,பேருந்து தரிப்பிட, தொடருந்து பகுதிகளில் இராணுவத்தினர் தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கோவிட் – 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் யாழ். தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட கொடிகாமம் பகுதி சந்தையில் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கொடிகாமம் வர்த்தக நிலையம், சந்தை பகுதி முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடிகாமம் பகுதி யாழ்ப்பாணம் 52 படைப்பிரிவு இராணுவத்தினரால் இன்றைய தினம் காலை தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.