இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மாப்பிள்ளைக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், திருமணம் போன்ற நிகழ்வுகளில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலகட்டத்தில், திருமணங்கள் பல வித்தியாசமான முறையில் நடந்துவருகின்றன. அதன் படி மும்பையில் சர்துல் கதம் மற்றும் தனுஜா என்பவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தின் போது மணப் பெண் மாப்பிள்ளைக்கு தாலி கட்டினார். இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இருவரும் தங்கள் காதலை அந்த காலகட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. 4 ஆண்டு படிப்பு முடிந்த பின்னர் தான் அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அப்போது ஒருமுறை டீக்குடித்தபடி சந்தித்து பேசிய சர்துல் பெண்ணியம் பற்றி பேசினார். அப்போது சர்துல் தான் ஒரு பெண்ணியவாதி என தனுஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அப்போது சர்துல் தனுஜாவிடம் ஏன் பெண் மட்டும் தான் தாலி கட்டிக்கொள்ளவேண்டுமா? ஆண் கட்டிக்கொள்ளக்கூடாதா என கேள்வி எழுப்பினர். அப்போது தான் திருமணத்தின் போது நான் தாலி கட்டிக்கொள்வேன் என உறுதி எடுத்தார் சர்துல்.
நான் தனுஜா கழுத்திலும், அவர் என் கழுத்திலும் தாலி கட்டிக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என கூற, அதே போல் நடந்த திருமணத்தில் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தாலி கட்டிக்கொண்டனர். அந்த புகைப்படம் இப்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.



















