நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அலுவலகம் முடப்பட்ட நிலையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர்.
அத்துடன் தற்காலிகமாக சிறிது நாட்களுக்கு சபாநாயகர் அலுவலகம் வருவதையும் தவிர்த்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை,நாட்டில் இன்று கோவிட் தொற்றுக்குள்ளான 1896 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.