நாட்டின் 14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் 100 மி.மீ.மழை பெய்யும் .
இதன்படி, மன்னார், புத்தளம் , குருநாகல் , மாத்தளை , கண்டி, கம்பஹா,கேகாலை , நுவரெலியா, பதுளை , கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி , காலி, மாத்தறை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கே வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மின்னல் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.