இலங்கையின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் சத்திர சிகிச்சை முககவசம் உட்பட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
முககவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மெதவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்



















