கோவிட் தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
பைசர் அமெரிக்கா நிறுவனமும் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் இதனை இறுதி செய்துள்ளன.
இதன்படி 900,000 பைசர் குப்பிகள் எதிர்வரும் ஜூலையில் இலங்கைக்குக் கிடைக்கும்.
49 லட்சம் குப்பிகள் அக்டோபர் மாதத்தில் கிடைக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.




















