விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியல் ஹிட்டாக ஓடுகிறது.
இதே பெயரில் முதலில் வேறொரு கதையில் சீரியல் ஓடிக் கொண்டு இருந்தது. கொரோனாவால் நிறுத்தப்பட்ட அந்த சீரியலில் பெயரை மட்டும் அதே வைத்து கதை மற்றும் நடிகர்களை மாற்றியுள்ளனர்.
இந்த புதிய கதையும் நன்றாக விறுவிறுப்பாக தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. சீரியல் நாயகன் மாயன் வருங்கால மனைவியை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வார்.
அந்த உண்மை மனைவியின் அப்பாவும், தாய் மாமனான அவருக்கு மட்டும் தெரியாது. தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் அவருக்கு உண்மை தெரியவர மாயனை அடித்து தனது மகளை அவரிடம் இருந்து பிரித்து கூட்டிச் செல்கிறார்.
அந்த பரபரப்பான புரொமோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.