சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.