தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் உதயநிதி பெரும்பாலும் ஹீரோவாகவும், முதல்வர் ஸ்டாலின் மகன் என்று தான் பலருக்கும் ஞாபகம் வரும்.
ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தினை அவதானித்தால் இவர் இந்த இரண்டு இடத்தினையும் கடந்து, அரசியலுக்கு செம்ம மாஸாக எண்ட்ரியாகியுள்ளதோடு, தனது முதல் வாய்ப்பிலேயே ஏகப்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றதோடு தற்போது எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்றைய தினத்தில் இவர் பொறுப்பேற்க சென்ற நடை, அவர் கொடுத்த வாக்குறுதி என அனைத்தையும் மிகவும் துள்ளியமாக கவனித்த ரசிகர்கள், தொண்டர்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது பல படங்களில் பயங்கர பிஸியாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இளமைக் கால புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
இப்புகைப்படத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில், சோடாப்புட்டி கண்ணாடியும் அணிந்து பழுத்த பழமாக இருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.