சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதி தீவிரமாக பரவி பல்லாயிரம் உயிரை காவு வாங்கி வருகிறது.
சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களை தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான கேப்ரில்லா இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
அவரை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த ஆஜீத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆஜீத் தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மற்றொரு பிக்பாஸ் பிரபலமான சென்ட்ராயனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் தனியறையில் இருப்பதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தை மற்றொரு அறையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.