முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்டுள்ளது.
முல்லைத்தீவு நந்திக்கடற் கரையில் சுடர் ஏற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று (12) முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியனால் முன்னெடுக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றிரவு இந்த அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



















