வெல்லம்பிட்டியில் உள்ள வீடொன்றில் மதபோதகர் நடத்திய ஆராதனையில் கலந்துகொள்வதற்காக சென்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆராதனையில் கலந்துகொண்ட 6 குடும்பத்தை சேர்ந்த 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Zoom தொழிநுட்பத்தின் ஊடாக ஆராதனை நடத்திய மதபோதகர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைக்காக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னிலையாகுமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.



















