ஒவ்வொரு ஆண்டும் உலக மக்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணிப்பது உண்டு.
அப்படி, பிலவ வருடம் துவங்கியிருக்கும் இந்நிலையில் இனிவரும் காலங்கள் மக்களுக்கு எப்படி அமையும்? என்பதை கணித்துள்ளனர்.
ஏற்கனவே சார்வரி வருடத்தில் மக்கள் வைரஸ் நோயால் அவதிபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில், பிலவ வருடம் எப்படி அமைய இருக்கிறது? என்பதை பற்றி பார்ப்போம்… சார்வரி வருட பஞ்சாங்கம் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும், பொருளாதார நிலை வீழ்ச்சி அடையும் என்றும், வெட்டுக்கிளி தாக்கம் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அது அத்தனையும் நடைபெற்ற நிலையில் பிலவ வருடத்திய வெண்பாவின் படி நாட்டில் மழை என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பது தெரிகிறது.
மேலும் பீடைகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கெடுபலன்களுக்கு குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. நாட்டின் அரசராக இருப்பவர் கொடுமை புரிவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய், பித்தலாட்டம், நோய்கள் போன்றவை தாண்டவமாடும் என்கிறது. மேலும், மக்கள் படும் துன்பத்திற்கு அளவே இருக்காது என்றும், நான்கு கால் பிராணிகளுக்கு துன்பங்கள் வரும் என்றும், விவசாயத்தில் கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால் வேளாண்மை பாதிக்கப்படும் என்றும், பசுக்கள் அழிவதால் பாலுக்கு பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சாங்கத்தின்படி பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், மக்கள் அதிக அளவில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். மக்களுக்கு இந்த சூழ்நிலையிலும் கூட போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.
எந்த ஒரு விஷயமும், தனக்கென்று வரும் வரை அது செய்தி தான். இந்த நிலை மாறி உலக நடப்புகளுக்கு ஏற்ப தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பாக இருக்கின்றது.
மேலும், அனைத்து பத்திரிகைகளும், ஊடகத்துறைகளும் மக்களுக்கு அடிக்கடி வலியுறுத்தி வருவது இது ஒன்றுதான். எல்லா விஷயங்களை தெரிந்து கொண்டும் அலட்சியமாக இருப்பது மிகப் பெரிய பாவச் செயலாகும்
ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் வரக்கூடிய ஆபத்தை முன்பே எச்சரிக்கிறது. WHO எனப்படும் (வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன்) உலக சுகாதார மையம் அடுத்து மூன்றாம் அலை வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் கூடுமானவரை ஒவ்வொரு தனிமனிதனும் கட்டுப்பாடுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தங்களையும், மற்றவர்களையும் கொடிய நோய் தாக்கத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
இறுதியாக, இந்த வருடத்தில் அக்னி பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு நிறைய நற்பலன்கள் உண்டாகும். மேலும் வீடுகளிலும், கோவில்களிலும் நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என்றும் அப்பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் முதல் காற்று வரை அத்தனையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் இந்நிலை நீடிக்காமல் இருக்க நம்மால் முடிந்த வரை தண்ணீரை சேகரிப்பதும், பிரபஞ்சத்தில் மாசு ஏற்படுத்தாமல் காற்றை சுத்தமாக வைத்திருப்பதும் தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது….