பிரித்தானியாவில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு திங்கட்கிழமை அதாவது மே 17 முதல் புதிய விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரித்தானியாவில் இந்தியா கொரோனா மாறுபாடு தொற்றுகளில் அதிகரித்து வந்தாலும், மே 17 அன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.
அதேசமயம் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதன் மூலம் இந்திய மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள அச்சுற்றுதல் கட்டுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.
மே 17 முதல் மாற்றப்படும் விதிகள்:
மக்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கலாம்.
வெளிநாட்டு சுற்றுலாவுக்கான தடை, பச்சை பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நீக்கப்படும்.
இரவில் வெளியில் தங்க அனுமதிக்கப்படும்.
மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில் முகக் கவசங்கள் இனி அணிய தேவையில்லை.
பல்கலைக்கழக மாணவர்கள் நேரடி கற்பிப்பதற்குத் திரும்புவார்கள்.
சினிமாக்கள் மற்றும் திரையரங்குகளில் மீண்டும் திறக்கப்படும்.




















