பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி காலை வேளையில் பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் 37 வயதான மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்




















