மக்களின் பெறுப்பற்ற நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை சரியாக முன்னெடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வை அடுத்து மக்களுடன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


















