சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறசாம்சங் நிறுவனம் தனது குறைந் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதைவிட குறைந்த விலையில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, AMOLED, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புது 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் மெமரி விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.