ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பயனர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்க இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஜியோ மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷன் இணைந்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது. இந்த சலுகை கொரோனா தொற்று சரியாகும் வரை வழங்கப்படுகிறது. தொற்று காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜியோபோன் பயனர்களுக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.
இத்துடன் ஜியோபோன் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ஜியோபோன் பயனர்களுக்கு அதே மதிப்புள்ள கூடுதல் ரீசார்ஜ் சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ. 75 சலுகையை தேர்வு செய்யும் போது கூடுதலாக ரூ. 75 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஜியோபோன் வருடாந்திர அல்லது சாதனத்துடன் வரும் சலுகைகளுக்கு பொருந்தாது. இரு சலுகைகளும் மே 15 முதல் வழங்கப்படுகிறது