இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கோவிட் மரபணு வரிசை முறையின் போது கொழும்பில் ஒரு தனியார் வைத்தியசாலையால் அனுப்பப்பட்ட ஒரு மாதிரியில் கோவிட் வைரஸின் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இந்த மாதிரி வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டதாக ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறியுள்ளார்.
பேராசிரியர் மாலவிகேயின் ஆய்வகமே மரபணு வரிசை முறைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,மழையுடன் கூடிய காலநிலையுடன் கோவிட் -19 வைரஸ் நோய் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.