அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சீனா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .
இலங்கையின் சீனத் தூதரகம் இது தொடர்பில் டுவீட் செய்துள்ளது.
இதில், சீனாவின் தூதர் குய் ஜென்ஹோங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் இது தொடர்பில் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் சில முக்கியமான முன்னேற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் சீனத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
சீனாவில் இருந்து மேலும் 3 மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெறப்போவதாக ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் கூறியிருந்தது.
இந்த நிலையில் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் மற்ற மாகாணங்களில் தடுப்பூசி திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனா இதுவரை இலங்கைக்கு 600,000 குப்பி சினோர்பார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.