கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டதுடன் 40பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 28ஆயிரத்து 582பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் , 24ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 70ஆயிரத்து 447பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் இதுவரை தொற்றிலிருந்து 12இலட்சத்து 33ஆயிரத்து 287பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்