உக்குவெல பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் குறித்த பிரதேசத்தின் பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பட்டியலில் தனது உறவினர்களின் பெயர்களை சேர்க்குமாறு தெரித்த குறித்த பெண் பிரதேச சபை உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்தமை தாக்குதலுக்கு காரணமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் கிராம உத்தியோகத்தர் தற்போது சிகிக்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினரை கைது செய்யுமாறு கோரி உக்குவெல பிரதேச செயலகத்தின் கீழ் பணி புரியும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















