இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த விடுமுறை தினங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த இரண்டு நாட்களும் அரச நிறுவனங்களுக்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரச விடுமுறை என அறிவிக்கப்பட்டாலும் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வங்கிகள் வழைமையை போன்று இயங்கும் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.