சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னரும் 130க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 134 பேரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள்.
அவர்களில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாக பெடரல் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 134 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 80 வயதுள்ளவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் ஆவர்.
தொற்றுக்கு ஆளானவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களில் 12 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என பெடரல் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.