பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதல் பிரான்ஸ் முழுவதும் உள்ள உணவகங்கள், பார்கள், அத்தியாவசியமற்ற கடைகள், சினிமாக்கள், தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், கலச்சாரம் மற்றும் விளையாட்டு மையங்கள் திறக்கலாம்.
வெளிப்புற உணவக மொட்டை மாடிகளில் 6 பேர் வரை குழுவாக ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவும் இரவு 7 மணிக்கு பதில் 9 மணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதல் ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வணிங்களுக்கான சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டாலும் உட்புறங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதியில்லை மற்றும் உணவகங்களில் உள்ள வெளிபுற இருக்கைகளில் 50% மட்டுமே பயன்பாட்டிற்கு அனுமதி.
சினிமாக்கள் மற்றும் தியேட்டர்களில் 35% இருக்கைகள் மட்டுமே பயன்பாட்டிற்கு அனுமதி.
வணிகங்கள் ஓரளவு செயல்பட அனுமதிகயளிக்கப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என பிரான்சின் நிதியமைச்சர் Bruno Le Maire குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரான்சில் உள்ள சில மருத்துவ நிபுணர்கள், தினமும் பதிவாகும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மே மாத நடுப்பகுதிக்குள் 20 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என பிரான்ஸ் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.