மென்பொருள் தொடர்பாக 13 வயதிலேயே தமது திறமையை வெளிப்படுத்தியுள்ள பில் கேட்ஸ், பெண்கள் விடயத்தில் மிக மோசமான நபர் என பல்வேறு தரவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
தமது சிறுவயது நண்பர் பால் ஆலன் உடன் இணைந்து பில் கேட்ஸ் 20-வது வயதில் தொடங்கிய நிறுவனம் தான் மைக்ரோசாப்ட்.
உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ள மைக்ரோசாப்டின் மொத்த மதிப்பு சுமார் 93 பில்லியன் பவுண்டுகள். ஆனால் பில் கேட்ஸ் தமது இளைமை காலத்தை மிக வித்தியாசமாக கொண்டாடியுள்ளார் என்றே பத்திரிகையாளர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சியாட்டிலில் செயல்பட்டுவரும் பல நிர்வாண விடுதிகளில் அடிக்கடி சென்று பொழுதைப் போக்கும் பழக்கம் கொண்டவர் பில் கேட்ஸ்.
மட்டுமின்றி, நிர்வாண நடனக் கலைஞர்களை குடியிருப்புக்கு அழைத்து வந்து, தமது நண்பர்களுடன் விருந்து வைத்து கொண்டாடுவதாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பில் கேட்ஸின் பெண்கள் மீதான நெருக்கம் அனைத்தும் அவரது மனைவி மெலிண்டாவுக்கு தெரிந்திருந்தது என்றே கூறுகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பல பெண் ஊழியர்களுடன் பில் கேட்ஸ் தவறான தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது, நிர்வாக அமைப்பால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, பல தகவல்கள் வெளியான நிலையிலேயே பில் கேட்ஸ் நிர்வாக அமைப்பில் இருந்து ராஜினாமா செய்து கொண்டார்.
மட்டுமின்றி சிறார் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி, அமெரிக்க சிறையில் இருந்த தொழிலதிபர் எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் நட்பு பாராட்டி வந்துள்ளதும், இருவரும் 2011-ல் அறிமுகமானதாகவும், இதன் பிறகு 3 வருடங்களில் எப்ஸ்டீன் மீது சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
ஒருமுறை நியூயார்க் நகரில் அமைந்துள்ள எப்ஸ்டீன் குடியிருப்பில் இரவு 8 மணிக்கு சென்ற பில் கேட்ஸ் பல மணி நேரம் அங்கே தங்கியிருந்ததாகவும், அப்போது முன்னாள் ஸ்வீடன் அழகியும் அவரது 15 வயது மகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்வது தொடர்பாக பில் கேட்ஸ் தமது புதிய நண்பர் எப்ஸ்டீன் உடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற பல காரணங்களே மெலிண்டாவை விவாகரத்துக்கு தூண்டியதாகவும் 2019-ல் இருந்தே அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் எப்ஸ்டீன் உடனான நட்பு, பெண் ஊழியர்களுடனான நெருக்கம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பில் கேட்ஸ் பதிலளிக்க நேரிடலாம் என்றே முதன்மை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.