எந்த ஒரு சூழ்நிலைக்கும் பெரும்பாலும் மக்கள் காபியை குடித்து வருகிறார்கள். நாம் எவ்வளவு காபி குடிக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் மரபணு குறித்த ஆதாரங்களை தென் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காபி குடிக்கும் அளவை நிர்ணயிக்கும் காரணிகளாக மரபணுக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காபி அதிகம் குடிக்கும் சிலருக்கு எந்த பிரச்னையும் வராமல் இருக்கலாம், ஏனெனில் அவர்களின் மரபணு காபினை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும்.
அதுவே, காபி குறைவாக குடிப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். காபின் பொருளை அவருடைய மரபணு ஏற்றுக்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
காபி குடிப்பதால் ஏற்படும் தனிப்பட்ட சாதக பாதகங்களை அவர்களின் மரபணுக்களும் தீர்மானிக்கின்றன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக நடத்திய ஆய்வில், உயர் இரத்த அழுத்தம், ஆஞ்சினா எனும் இதயத்தில் ரத்த ஓட்டம் குறைவாக இருத்தல், இதயத்துடிப்பில் பிரச்சனை இருப்பவர்கள் காபி குறைவாக குடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் எல்லா வகையான காரணங்களுக்காகவும் காபி குடிக்கிறார்கள். அவர்கள் சோர்வாக இருக்கும்போது, சந்தோசத்தில் இருக்கும்போது என அனைத்து தருணங்களிலும் காபியை எடுத்துகொள்கின்றனர்.
ஏனென்றால் அது நல்ல சுவை. அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற காபி குறித்த ஆய்வுகள் காபிக்கு அடிமையாகும் பழக்கத்தைக் குறைக்கிறது. எனவே அளவோடு காபியை பருகி வாருங்கள்…,.