ஆண்களை விட பெண்கள் தான் சிக்கமாக செயல்படுவதில் கெட்டிக்காரார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா..? காரணங்கள் இதோ
தேவைக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கும் சிக்கனம் என்பது நம்மை தரும் விஷயமாகும். இன்றைய சூழலில் சிக்கனம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆண்களை விட பெண்கள் தான் சிக்கமாக செயல்படுவதில் கெட்டிக்காரார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா..? காரணங்கள் இதோ..
வீட்டில் எவ்வளவு பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் பெண்கள் அஞ்சறைப்பெட்டியில் சேமித்துவைத்திருக்கும் பணத்திற்கு மட்டும் எப்போதும் தட்டுப்பாடு ஏற்படாது.
ஆண்களில் பலரும் ஆடம்பரத்திற்காக வரவை மீறிய செலவு செய்வதுண்டு. ஆனால் பெண்கள் அனைவருமே இந்த பொருள் இப்போது நமக்கு தேவை தானா? என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்தே செலவிடுவார்கள்.
தங்கத்தை கைகளிலும், கழுத்திலும் ஆபரணங்களகாக அணிந்து எதிர்கால முதலீடாக சேமித்து வைக்கும் திறன் கொண்டவர்கள்.
மளிகை பொருட்கள் தொடங்கி மருந்துபொருட்கள் வரை அன்றாட செலவுகளை குறித்து வைத்துக்கொண்டு அதற்கு மேல் செலவு செய்வதை தவிர்ப்பதுடன் தேவையற்ற செலவுகளை இனம் கண்டு அவற்றை தவிர்த்தும் விடுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவருடைய சம்பளத்தையும் குடும்ப செலவுகளுக்காக பயன்படுத்தி விடாமல் பட்ஜெட் போட்டு செலவு போக மீதி பணத்தை சேமித்து வைக்கும் குணம் கொண்டவர்கள் பெண்கள்.
பெருபாலான அப்பாக்கள், குழந்தைகள் கேட்பதை சற்றும் யோசிக்காமல் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால் அதிக அளவு செலவில் பொம்மை வாங்கி தருவதை அம்மாக்கள் அனுமதிப்பதில்லை என்பதை குழந்தைகள் அறிவார்கள்.
கையில் உள்ள பணத்தில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு என ஆண்கள் செலவு செய்வது வழக்கம். பெண்கள் மீதப்படுத்திய பணத்தை பத்திரமாக சேமித்து வைப்பார்கள்.
கடன் பெற்றாவது விரும்பிய பொருளை வாங்க வேண்டும் எனற மனநிலை பெண்களுக்கு இருப்பதில்லை. பெண்களுக்கு கடன் என்றாலே அலர்ஜி. அதனால் திட்டமிட்டே பொருட்களை வாங்குவார்கள்.
சமையலிலும் பெண்கள் சிக்கனத்தை பின்பற்றுவார்கள். பருவ காலத்துக்கு ஏற்ப விலை குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களை வாங்குவது மீதமான உணவுப்பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவது எனற வழிகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் போனஸ் போன்ற திடீர் வருமானம் கிடைக்கும் நிலையில் அவற்றை செலவு செய்யாமல் சேமிப்பாக வைத்து கொள்வார்கள்.
ஷாப்பிங் செல்லும் பெண்கள் அதிகமாக செலவு செய்வார்கள் என்று பொதுவான கருத்து உண்டு. ஆனால் ஷாப்பிங் செய்வதில் கூட பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள். மலிவான விலை என்பதற்காக தரம் குறைவான ஆடைகளை வாங்கினால் குறுகிய காலத்தில் மீண்டும் வேறு ஆடைகளை வாங்க வேண்டியதிருக்கும். அதனால் பொறுமையாக தரமான ஆடைகளை கையை கடிக்காத விலையில் தேர்வு செய்வார்கள்