பல்கேரியா நாட்டு தீர்க்கதரிசி பாபா வெங்கா கணித்த எதிர்கால கணிப்புகளில் 2024ல் நடப்பதாக எழுதியவை என்னென்ன நடந்துள்ளன என்பதை நாம் இப்பதவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாபா வெங்கா 2024 இல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என கணித்திருந்தார். அரசியல் மாற்றம், மாறிவரும் பொருளாதார சக்திகள் மற்றும் கடன் அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் எனவும் கணித்திருந்தார்.
அவர் கணித்ததைப் போலவே அமெரிக்காவிலும் பொருளாதார மந்தநிலை அச்சம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் மந்தநிலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பல பொருளாதார வல்லுநர்கள் அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக இது சாத்தியம் என்று கருதுகின்றனர்.
பருவநிலை நெருக்கடி மேலும் மோசமடையப் போகிறது என்ற பாபா வெங்காவின் கணிப்பும் உண்மை என நிரூபணமாகியுள்ளது. 2024-ல் உலக வெப்பநிலை சாதனை முறியடிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ், 2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டின் முந்தைய அளவை விட இந்த ஆண்டின் முடிவில் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
மருத்துவத் துறையில் பாபா வெங்காவின் மற்றொரு நேர்மறையான கணிப்பு 2024 இல் நிறைவேறியது. இந்த ஆண்டு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
INTERLACE சோதனையின் முடிவுகள், சாதாரண சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு நோயாளிகளுக்கு கீமோதெரபி வழங்கப்பட்டால், இறப்பு ஆபத்து 40 சதவிகிதம் குறைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
இது சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தையும் முன்னேற்றத்தையும் 35 சதவிகிதம் குறைக்கிறது.