மேஷம்
உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.
ரிஷபம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாகசில முடிவுகள் எடுக்கும் நாள்.
சிம்மம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. யாரையும்யாருக்கும் நீங்கள் சிபாரிசுசெய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
விருச்சிகம்
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனவசதிப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
தனுசு
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மகரம்
கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கும்பம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். விமர்சனம் கண்டு அஞ்ச வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மீனம்
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்து பேசுவார். திறமைகள் வெளிப்படும் நாள்.