யாழ். நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று மாலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப்பகுதியில் வைத்து,
கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.