இலங்கையில் உள்ள அரச வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 20, 2024 திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில்,
மருத்துவ நிபுணர்கள், தர மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து மருத்துவ நிர்வாக தர அதிகாரிகள், பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் ஆகியோரின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஜனவரி 01, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.