பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வருகிறார் போனி கபூர்.
இவர் இந்தியளவில் முன்னணி கதாநாயகையாக விளங்கிய நடிகை ஸ்ரீ தேவி அவர்களின் கணவர்.
போனி கபூர் தயாரிப்பில் தற்போது தல அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை. இதற்கு முன் இவ்விருவரும் இணைந்து நேர்கொண்ட பார்வை எனும் சூப்பர்ஹிட் படத்தையும் கொடுள்ளனர்.
இந்நிலையில் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று தான் மைதான்.
இப்படத்திற்காக மைதான் படத்துக்காக மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று, அண்மையில் வந்த டவ்தே புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
புயல் தாக்கிய சமயத்தில் 40க்கும் மேற்பட்டோர் அந்த செட்டில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் இதனால் 2 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.