ஆதிவாசிகள் சமூகத்தில் இருந்து இன்னும் ஒரு கொரோனா நோயாளி கூட இனம் காணப்பட வில்லை என ஆதிவாசிகள் தலைவன் ஊருவலகே வன்னியலத்தோ தெரிவித்தார்.
கண்டியில் நடந்த வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,…
இயற்கையுடனான இயல்பு வாழ்க்கையும் சுற்றாடலை நேசிக்கும் சமநிலை வாழ்க்கையும் நாம் மேற்கொள்வதன் ஊடாக இயற்கையும், சுற்றாடலும் எம்மைப் பாதுகாக்கும் என்கிறார்.
இருப்பினும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கவனத்திற்கொண்டு, அரசியல், இன, மத, பிரதேச பேதங்களை மறந்து மேற்படி அழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.