சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நினைவு பலகை நீக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரியின் அறிவுறுத்தலுக்கு அமைய அந்தப் பலகை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தின் நினைவு பலகையில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமான், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அதையடுத்து, நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்ட மா அதிபர் திணைக்களத்திலுள்ள குறித்த நினைவு பலகையை உடனடியாக நீக்கியுள்ளார்.