ரியல்மி நிறுவனத்தின் எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் தனது எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 27,999 என துவங்கும் என கூறப்படுகிறது.
இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியண்ட் ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், டூயல் 5ஜி சிம் வசதி கொண்டிருக்கும் என இதுவரை உறுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் உடன் இணைந்து ந்த ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்கிறது.